அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டி திருவள்ளுவர் கலையரங்கத்தில் 26-06-2024 அன்று காலை 10:50 மணி அளவில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் அனைத்து பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் முனைவர் இரா. ஜெயராமன் அவர்கள் ஒருங்கினைத்தார்.