கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

Charles Babbage Computer Forum Festival

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிஅறிவியல் நிறைவு விழா மற்றும் “மேகக் கணிமையில் எதிர்கால போக்குகள்” பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கல்லூரியின் கணினிஅறிவியல் துறை சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.அன்பரசி, அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திரு சந்தானம் சிவன், இயக்குநர், இணையம் ஒருங்கிணைந்த நிறுவனம், கனடா அவர்கள் கலந்துகொண்டு மாணாக்கர்களுக்கு மேகக் கணிமையில் எதிர்கால போக்குகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பினை விளக்கினார். மேலும், மாணாக்கர்களுக்கு மேகக் கணிமையில் இருக்கும் புதிய வாய்ப்புகள், சவால்கள் மற்றும் சான்றிதழ் படிப்பு தொடர்பான தகவல்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வினை கணினிஅறிவியல் துறைத்தலைவர் முனைவர் வெ.சங்கீதா, அவர்கள் வரவேற்புரை அளித்து ஒருங்கிணைத்தார். உதவிப்பேராசிரியர் திரு த.அருண்நேரு, அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் கலந்துகொண்டனர்.