கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

Charles Babbage Computer Forum Festival

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் சார்லஸ் பாபேஜ் கணினி மன்ற தொடக்கவிழா திருவள்ளுவர் திறந்தவெளிக் கலையரங்கில் 27-09-2023 நடைபெற்றது. கல்லூரியின் நடைபெற்ற இதில் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் வெ.சங்கீதா, அவர்கள், வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் வே.அன்பரசி அவர்கள் தலைமையுரையாற்றி மன்ற செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிற்நுட்பங்களின் இன்றைய தேவை குறித்த மாணவர்களிடையே எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் திரு த.அருண்நேரு, அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு.துரைசாமி, அவர்கள் கலந்துகொண்டு தரவு அறிவியல், இணைய தொழிற்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இன்றைய தேவைகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ள கூடிய மொழிகள் மற்றும் நிரல்களை பற்றி செயல் விளக்கங்களோடு விளக்கினார். இந்நிகழ்வில் முதுநிலை இரண்டாமாண்டு மாணவி கோ.லலிதா, மன்ற செயலராகவும் இளநிலை மூன்றாமாண்டு மாணவர் வே.நந்தகுமார், துணை செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் இளநிலை மூன்றாமாண்டு மாணவி ச.சத்தியபிரியா, நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.