கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

Memorandum of Understanding at Salem Veranda with Race Training Institute

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நூலகத்தின் பெரியார் வாசிப்பு மன்றம், மாணாக்கர்களுக்காக பயிற்சி பட்டறைகள், தன்னம்பிக்கை பயிலரங்கங்கள் மற்றும் போட்டித் தேர்வு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் சேலம் வராண்டா ரேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமானது நேற்று (15.05.2024) கையெழுத்திடப்பட்டது. இந் நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.அன்பரசி அவர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் சேலம் கிளை நிறுவனர் சு. கோவலன், கிளை மேலாளர் ரா.சசிக்குமார், தமிழ்த்துறை தலைவர் தி.கே.சித்திரைசெல்வி, நூலகர் கி.ச.கல்யாணி ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன்படி வரும் ஆண்டுகளில், மத்திய, மாநில அரசு தேர்வுகள், குறிப்பாக TNPSC மற்றும் வங்கி தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அது தொடர்பான பயிற்சிகளை சேலம் வராண்டா ரேஸ் நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது. மேலும், அவர்கள் ரூபாய் முப்பதாயிரம் மதிப்புள்ள போட்டித் தேர்வு புத்தகங்களை, மாணவர்களின் பயன்பாட்டிற்காக, நூலகத்திற்கு நன்கொடை அளித்தனர்