கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

தமிழ் இலக்கிய மன்ற விழா

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.அன்பரசி, அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டி.க.சித்திரைசெல்வி அவர்கள், தமிழ்மொழி கடந்து வந்த உயர்வான நிலைகளை எடுத்துரைத்து முன்னிலையுரை வழங்கினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் கிருட்டினகிரி, அரசு ஆடவர் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் முனைவர் தா.பேகம் அவர்கள், திருஞானசம்பந்தம் முதல் தற்கால இலக்கியவாதி வரை உள்ள தமிழ் இலக்கியங்கள் அகிலத்தை வெல்லும் என்பதை எடுத்துரைத்தார். இந்நிகழ்விற்கு தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் பொ.செந்தில்குமார் அவர்கள், வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்விற்கு தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் அ.சுபா, சிறப்பு விருந்தினர் அறிமுக உரையும், தழிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் இ.சுஜிதா, தொகுப்புரையும் நல்கினர். இந்நிகழ்வின் நிறைவாக இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி தெ.மதியரசி நன்றியுரை வழங்கினார். இதில் போரசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்