தேதி: 31-01-2024
இடம்: திருவள்ளுவர் திறந்தவெளி கலையரங்கம்
பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ”சமூக நீதிக் காவலர் கலைஞர்” என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இக்கல்லூரி சார்பாக போட்டியில் பங்கேற்ற மாணாக்கர்கள் வெ.பாவனா இளநிலை இயற்பியல் மூன்றாமாண்டு, முதல் பரிசும் (ரூ.1500) கோ.இனியகவி இளநிலை கணிதவியல் இரண்டாமாண்டு, இரண்டாம் பரிசும் (ரூ.1000) மற்றும் ஆ.அதிரூபன் இளநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் பரிசும் (ரூ.500) பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் வே.அன்பரசி அவர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுத் தொகையினை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டி.க.சித்திரைச்செல்வி கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் இ.சுஜிதா, தமிழ் உதவிப்பேராசிரியர் ஆகியோர் உடனிருந்தனர்.