Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

இரத்ததான முகாம், பல் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனை முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் (NSS), இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து 12.08.2026 அன்று காலை 10.00 மணியளவில் இரத்ததான முகாம், பல் மருத்துவமுகாம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட முகாம்கள் கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்தவங்கி அலுவலர் மருத்துவர் ச.அ.கன்யா அவர்கள் வட்டார மருத்துவ அலுவலர் கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வை நாட்டு நலப்பணித்திட்ட (NSS) திரு.த.அருண்நேரு, இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் (YRC) முனைவர் அ.சுபா, செஞ்சுருள் திட்ட அலுவலர் (RRC) முனைவர் இ.சுஜிதா ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI