தகடூர் புத்தகப் பேரவை – பட்டிமன்றம்
பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் ஆ.அதிரூபன் (கணினி அறிவியல் மூன்றாமாண்டு) தகடூர் புத்தகப் பேரவை சார்பாக தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 24.09.2024 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான பட்டிமன்றத்தில் பங்குபெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார். அவர் 04.10.2024 அன்று தருமபுரியில் நடந்த புத்தகத் திருவிழாவில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களிடமிருந்து சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாகப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இ.சுஜிதா அவர்கள் உடனிருந்தார்.