பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் தடுப்பு மற்றும் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்புவது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 13.09.2024 முற்பகல் 11.15 மணியளவில் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் தடுப்பு மற்றும் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்புவது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திருவள்ளுவர் திறந்தவெளிக் கலையரங்கங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை கல்லூரியின் முதல்வர்(மு.கூ.பொ) முனைவர்.வீ.இரவி அவர்கள் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார். இதில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர்.டி.க.சித்திரைசெல்வி, அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர், திருமதி.வான்மதி, B.A.,B.L., அவர்கள் “போதைப்பொருள் பழக்கம் உள்ளவர்கள் உடனான நட்பினைத் தவிர்க்குமாறும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகமாட்டேன் என்ற சுய கட்டுப்பாடு அவசியம்“ எனவும் அறிவுறுத்தினார். சமூக ஊடகங்களில் தவறானவும், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று எடுத்துரைத்தார். இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பு விருந்தினர் தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.ச.பவித்ரா, M.A., அவர்கள் “குழந்தைகளை அடித்து துன்புறுத்துதல், குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம்“ ஆகியவற்றை குறித்த கருத்துக்களை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களை கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர்.வெ.சங்கீதா அவர்களும், தமிழ் உதவிப்பேராசிரியர் மற்றும் சமூகவியல் துறைத்தலைவர்(பொ) முனைவர்.பொ.செந்தில்குமார் அவர்களும் அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக கணிதத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.இரா.ஜெயராமன், அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் அனைத்துத்துறை பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், மாணாக்கர்கள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, காவல்துறை அலுவலர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இந்நிகழ்வை நூலகர், முனைவர்.கி.ச.கல்யாணி, அவர்கள் தொகுத்து வழங்கினார்.