பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று (25.07.2024) சேலம் எஸ்.கே.எஸ் மருத்துவமனை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பல் பரிசோதனை முகாம், முதல்வர் முனைவர்.வீ.இரவி அவர்கள் தலைமையில் காலை 11 மணியளவில் தொடங்கியது. பல் மருத்துவர் ம.கெளசல்யா அவர்கள் மாணவர்களிடையே, பற்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். அனைவரும் தினமும் இருமுறை பல் துலக்குவது நன்மை அளிக்கும் என்றார். பல் மருத்துவ முகாமில், 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்கள் பற்களை பரிசோதித்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மருத்துவமனை சார்பில், பற்கள் பாதுகாப்பு குறித்தான சிற்றேடு மற்றும் சென்சோடைன் பற்பசை இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை நூலகர் கி.ச.கல்யாணி, கணினி அறிவியல் உதவி பேராசிரியர் திரு.த.அருண்நேரு, எஸ்.கே.எஸ் மருத்துவமனை விற்பனை நிர்வாகி திரு. ஷா.முஹம்மது பைஸ் ஆகியோர் செய்திருந்தனர்.