தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் IT துறைக்கு தேவைப்படும் திறன்கள் அதை வளர்த்துக்கொள்வது பற்றிய நிகழ்ச்சி கணினி அறிவியல் துறை ஆய்வுக்கூடத்தில் இன்று 10.02.2025 நடைபெற்றது. கணினி அறிவியல் துறையின் சார்லஸ் பாபேஜ் கணினிமன்றம் மூலமாக நடத்தப்பட்ட இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் வீ.இரவி, அவர்கள் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் வெ.சங்கீதா, அவர்கள் வரவேற்புரையாற்றி ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினராக வ.செல்வம், HR மற்றும் A/c Manager, Zobility, பெங்களுரு அவர்கள் கலந்துகொண்டு IT துறையில் தற்பொழுது தேவைப்படும் திறன்கள் பற்றி மாணாக்கர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், மாணாக்கர்களின் IT துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரை கௌரவ விரிவுரையாளர் சி.விவேக், அறிமுகப்படுத்தினார். இறுதியாக மன்ற செயலாளர் திரு.த.அருண்நேரு, அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதில் கௌரவ விரிவுரையாளர்கள் திருவேங்கடம், ரஞ்சித்குமார், வசந்தி மற்றும் கணினி அறிவியல் துறை மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.