கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

Drug Awareness Pledge 2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டியில் 11-08-2023 அன்று காலை 10:30 மணி அளவில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. அன்பரசி அம்மா அவர்களும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் முனைவர் இரா. ஜெயராமன் அவர்களும் நாட்டு நல பணிப்பட்ட அலுவலர் முனைவர் நா. ரமேஷ் அவர்களும் காவல் ஆய்வாளர் திருமதி சரோஜா அவர்களும் உதவி ஆய்வாளர் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களுமாக 989 பேர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வை தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திய பேரணி நடைபெற்றது. இதில் பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டனர் பின்பு நண்பகல் 12 மணியளவில் மாணவ மாணவியர்களுக்கு போதை பழக்கத்தின் தீய விளைவுகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் P அபித்ரா இளம் அறிவியல் கணிதவியல் மூன்றாம் ஆண்டு முதலாவதாகவும், வி கோகிலா இளங்கலை சமூகவியல் மூன்றாம் ஆண்டு, மா சுபஸ்ரீ இளம் அறிவியல் இயற்பியல் இரண்டாம் ஆண்டு, ஆகிய இருவரும் இரண்டாம் இடம் பெற்றனர்.