கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

International Day of Yoga 2023

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 9-வது சர்வதேச யோகா தினம் 21-06-2023 அன்று கல்லூரியின் திருவள்ளுவர் திறந்தவெளி கலையரங்கில் மாணவ/மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்ட பெருந்திரள் யோகாசனப் பயிற்சிகள் கல்லூரியின் முதல்வர் முனைவர். வே. அன்பரசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் தனது தலைமை உரையில் "மருந்தில்லா வாழ்க்கை என்பது உடலும் உள்ளமும் ஒரு புள்ளியில் இணைந்தால் அமையும் எனவும், அதற்கு யோகா மிகவும் அவசியமானது" என்றும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக திருமதி புவனேஸ்வரி, யோகா பயிற்றுநர் அவர்கள் கலந்துகொண்டு மாணாக்கர்களுக்கான யோகாசன பயிற்சி மற்றும் ப்ராணயாமா பற்றி கூறி செய்முறையோடு விளக்கிட, மாணாக்கர்கள் பயிற்சி பெற்று பயனடைந்தனர். இந்நிகழ்வினை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) திரு த. அருண் நேரு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ந. ரமேஷ், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் இ. சுஜிதா மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் திருமதி ச.சோ.சித்ரா தேவி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.