கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

Anti Ragging Cell Legal Awareness Programme

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகவடிவதை/கேலிவதை தடுப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லூரியின் திருவள்ளுவர் திறந்தவெளி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர், முனைவர் வே.அன்பரசி அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்விற்கு வரவேற்பு நல்கி சிறப்பு விருந்தினர்களை பகவடிவதை/கேலிவதை தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ.சங்கீதா அவர்கள் அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்களாக பாப்பிரெட்டிப்பட்டி, வழக்குறைஞர், திரு.ஞானக்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, சமூக பணியாளர், PLV, திரு.ராபர்ட் கென்னடி ஆகியோர் கலந்துக் கொண்டு மாணாக்கர்களிடையே பகவடிவதை/கேலிவதை பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதை எதிர்கொள்ளும் முறைகள் பற்றியும் சட்டரீதியாக எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் கல்லூரியில் செயல்படும் பகவடிவதை/கேலிவதை தடுப்புக்குழு (Anti-Ragging Committee) மூலமாக தங்களது குறைகளையும், பிரச்சனைகளையும் எவ்வாறு தெரியபடுத்துவது மற்றும் வழக்கறிஞர்கள் மூலமாக சட்ட உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் விளக்கினர். இந்நிகழ்வில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணாக்கர்கள் பங்கு பெற்றனர். இந்நிகழ்வில் இயற்பியல் கௌரவ விரிவுரையாளர் திருமதி.ஜோதி தொகுப்புரையாற்றினார். இறுதியாக உதவிப்பேராசிரியர் முனைவர் பா.சுதா அவர்கள் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.