Awareness Programme on New Voters Enrolment
பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணாக்கர்களை புதிய வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதல்வர் முனைவர் வே.அன்பரசி அவர்கள் தலைமை தாங்கி புதிய வாக்காளராக பதிவு செய்ய இருக்கும் மாணாக்கர்களிடையே அதன் முக்கியத்தும் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி, வட்டாட்சியர் (தேர்தல்) அலுவலகத்தின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வில் தேர்தல் துணை வட்டாட்சியர் திருமதி.சாந்த லக்சுமி அவர்கள் கலந்துக் கொண்டு புதிய வாக்காளராக பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர், திரு.சதாசிவம், தேர்தல் பிரிவு உதவியாளர், திருமதி. தமிழ்மணி, கணினி பதிவாளர், திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் தேர்தல் பிரிவு அலுவலர் திரு.த.அருண்நேரு ஒருங்கிணைத்தார்.