கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

பட்டமேற்பு விழா

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டியில் 23.03.2024 அன்று பட்டமேற்பு விழா திருவள்ளுவர் கலையரங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. கல்லூரி முதல்வர் வே.அன்பரசி அம்மா, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் முனைவர்.இரா.கஸ்தூரிபாய் மேனாள் புலமுதன்மையர், பாவை கல்வி நிறுவனங்கள் நாமக்கல், மேனாள் ஆங்கிலத்துறை தலைவர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி சேலம் அவர்களையும், துறைத்தலைவர்களையும், பேராசிரியர்களையும், நிர்வாக பணியாளர்களையும், பெற்றோர்களையும், மாணவர்கள் அனைவரையும் வரவேற்று 2023-2024 ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்து தனது தலைமையுரையை ஆற்றினார். அடுத்ததாக சிறப்பு விருந்தினர் முனைவர்.இரா.கஸ்தூரிபாய் அம்மையார் மாணவர்களிடத்தில் ஒழுக்கமே மனித வாழ்க்கையின் உயிர் நாடி எனவும், தமிழன் வகுத்துள்ள ஒன்பது தானியம், எட்டு வகை மெய்ப்பாடு, ஏழு வகை ஸ்வரங்கள், ஆறு வகை சுவை, ஐந்து வகை நிலம், நான்கு வகை காற்று, மூன்று வகை தமிழ், இரண்டு வகை வாழ்க்கை நிலை, ஒன்று மட்டுமே ஒழுக்கம் என்று வைத்துள்ளான். ஆகவே தாங்கள் அனைவரும் ஒழுக்கத்தை கடைபிடித்தாலே அனைத்து வெற்றிகளும் அடைந்து விடலாம் என்று கூறி சீரியதொரு சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை மற்றும் இளங்கலை படிப்பிற்கான பட்டச் சான்றிதழ் 420 மாணாக்கர்களுக்கு வழங்கப்பெற்று உறுதி மொழி ஏற்றனர். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது.