கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

Skill Development Training Program

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06.03.2025 வியாழக்கிழமை அன்று இறுதியாண்டு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி நூலகம் மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து நடத்திய இந்நிகழ்விற்கு முதல்வர் முனைவர்.வீ.இரவி அவர்கள் தலைமையுரை நல்கினார். எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் திரு.ஈரோடு கதிர் அவர்கள் மாணவர்கள் வேலைக்கான திறன்களை எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். மாணவர்கள் தங்கள் உடைநேர்த்தி, முகபாவனை, சரளமாக பேசும் கலை மற்றும் உடல்மொழி என ஒவ்வொரு வகையிலும் தங்களை செம்மைப்படுத்தி உயர்வுற வேண்டும் என்றார். மாணவர்கள் தலைமைப்பண்பு, ஒருங்கிணைந்து பணிபுரியும் திறன் என மிகத் தெளிவான திட்டமிடலுடன் ஆத்மார்த்தமாக செயல்பட்டால் தங்கள் இலக்கினை வாழ்வில் எட்டலாம் என்றார். கணிதவியல் துறைத்தலைவர் முனைவர்.கோ.ஐயப்பன் சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகம் செய்தார். நன்றியுரையினை முதுகலை கணிதவியல் இரண்டாமாண்டு மாணவர் செல்வன் வி.யோகானந்தன் நல்கினார். நிகழ்வில் அனைத்து துறைத்தலைவர்கள், உதவிப்பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு திரு.ஈரோடு கதிர் பதிலுரைத்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் முனைவர் கி.ச.கல்யாணி செய்திருந்தார்.