தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமானுஜன் கணித மன்ற விழா கணிதத்துறை சார்பாக 22-09-2023 நடைபெற்றது. இதில் கணிதத்துறை தலைவர் முனைவர் கோ.ஐயப்பன், அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் வே.அன்பரசி அவர்கள் தலைமையுரையாற்றினார். அதில் கணிதத்தை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பயிலும் போது கணிதம் பயில்வதும், வாழ்க்கையும் அழகாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து முனைவர் பா.ராஜா, அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர் முனைவர் அ.சார்லஸ் சகாயராஜ் Carcks E-Care Thirpattur, அவர்கள் கணிதம் எப்படி நம் வாழ்வில் கலந்துள்ளது அதை எப்படி நாம் அனுகுவது என்று எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் தம் படைப்புகளை PPT மூலமாகவும் பேச்சுக்கள் மூலமாகவும் நடத்தினர். மு.நகோமி, II M.Sc., நன்றியுரையாற்றினார். இ.கார்த்திக் ராஜா, III B.S.c., இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் அனைத்து துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.