NSS Initiative to Plant One Crore Palm Seeds in Water Bodies Across Tamil Nadu
தமிழ்நாடு அரசு, மாநில நாட்டு நலப்பணித்திட்டம், அரசு கல்லூரிகள் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து நாட்டு நலப் பணித்திட்ட நாளினை (24.09.2026) முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணியானது செயல்படுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டத்தின் சார்பாக அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி, காவாப்பட்டி பெரிய ஏரியில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அரூர் வருவாய் கோட்டாட்சியர் செம்மலை, வட்டாட்சியர் மனோகரன், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.மைதிலி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் அரசுக்கல்லூரியின் சார்பினில் 6000 பனை விதைகள் ஏரியை சுற்றிலும் விதைக்கப்பட்டன. இந்நிகழ்வினை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரூர் - உடன் சேர்ந்து நமது நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு.த.அருண்நேரு அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.