கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

A One Day Workshop on “LED Light Assembling and Designing Technology”

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.02.2025 அன்று இயற்பியல் துறையின் ஏ.பி.ஜே.கலாம் மன்றத்தின் சார்பாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு “LED LIGHTS ASSEMBLING AND DESIGNING TECHNOLOGY" என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை காலை, மதியம் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்றது. காலைப் பிரிவில் தொடக்கவிழா மற்றும் கருத்தியல் வகுப்பு நடைபெற்றது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு LED பல்பின் உதிரிபாகங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட்டு அவர்களாலேயே வடிவமைக்கப்பட பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்நிகழ்வை இயற்பியல் துறையும் Pranav Solutions என்ற தனியார் நிறுவனமும் இணைந்து நடத்தியது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.வீ.இரவி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் Er.R.இளவரசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இயற்பியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் மோ.சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை கௌரவ விரிவுரையாளர் திருமதி ஜெ.ஜோதி அவர்கள் தொகுத்து வழங்கினார். இளநிலை இயற்பியல் மூன்றாமாண்டு மாணவன் பா.மோகன்குமார் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் இயற்பியல் துறை விரிவுரையாளர்கள் திரு.மு.தங்கராசு மற்றும் D.M.முனிராஜ் ஆகியோர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைத்தலைவர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.