Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

கல்லூரி வேலை வாய்ப்பு மையம் மற்றும் வராண்டா ரேஸ், சேலம் இணைந்து நடத்திய "TNPSC, SSC, IBPS தேர்வுகளுக்கான அட்டவணை 2026: ஓர் பார்வை"

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 23.01.2026 வெள்ளிக்கிழமை அன்று, போட்டித் தேர்வுகளுக்கான மாணவர் விழிப்புணர்வு நிகழ்வு முதல்வர் முனைவர்.வீ. இரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் தம் தலைமையுரையில், "மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன என்றும் மாணவர்கள் அதற்கான தேர்வுகளில் கவனம் செலுத்துமாறு" வலியுறுத்தினார். கல்லூரி வேலை வாய்ப்பு மையம் மற்றும் வராண்டா ரேஸ் சேலம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில், முதன்மை பயிற்சியாளர் திரு.பி.ஸ்ரீ.பிரசாத்குமார் அவர்கள், "TNPSC, SSC, IBPS தேர்வுகளுக்கான அட்டவணை 2026: ஓர் பார்வை" என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரை நிகழ்த்தினார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், கல்லூரி பயிலும் போதே அதற்கான பயிற்சிகளில், சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்றார். தேர்வுகளின் பாடத் திட்டங்களையும், வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் மாணவர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். தமிழ் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் அ.அபிசேக் மதன் சர்மா நன்றியுரை நல்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை நூலகர்.கி.ச.கல்யாணி செய்திருந்தார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI