கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

Tamil Ilakkiya Mandra Vizha

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 05.03.2025 அன்று காலை 10.30 மணிக்கு தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வீ.இரவி, அவர்கள் தலைமை வகித்து மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் தமிழில் பிழையின்றி பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் உரையாற்றினார். இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டி.க.சித்திரைசெல்வி அவர்கள், சங்க இலக்கியம் முதல் காப்பியங்கள் வரையிலான இலக்கியங்களில் உள்ள உறவுகளின் நிலைப்பாட்டினை எடுத்துரைத்து முன்னிலை உரை ஆற்றினார். இவ்விழாவில் தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் பொ.செந்தில்குமார் அவர்கள், வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் பெ.சுரேஷ், அவர்கள் தாய், தந்தை, ஆசிரியர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் போன்ற உறவுகளின் பேராற்றல் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் கௌரவ விரிவுரையாளர் முனைவர் பொ.கலைவாணி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியை தமிழ் கௌரவ விரிவுரையாளர் முனைவர் கோ.புவனேஸ்வரி அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் உதவிப்பேராசிரியர்கள் முனைவர் அ.சுபா, முனைவர் இ.சுஜிதா, தமிழ் கௌரவ விரிவுரையாளர்கள், பிற துறை போரசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிறைவாக இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி சே.மோனிஷா நன்றி தெரிவித்தார்.