கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழாவை முன்னிட்டு மூன்று நாள் திருக்குறள் கருத்தரங்கம்

நமது கல்லூரியில் 07.01.2026-அன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழாவை முன்னிட்டு திருக்குறள் கருத்தரங்க முதல் நாள் தொடங்கப்பட்டது. இக்கருத்தரங்கத்திற்கு முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமை தாங்கினார் அனைவரையும் தமிழ்துறை தலைவர் முனைவர் டி.க.சித்திரை செல்வி, அவர்கள் வரவேற்றார். முனைவர் பொ.செந்தில்குமார், தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர் கருத்தரங்கத்தின் நோக்க உரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கத்தின் சிறப்பு பொழிவாளர்களாக முனைவர் கு.கணேசன், சாகித்திய அகாதமி எழுத்தாளர் சேலம், முனைவர் சிவகாமி இணைப் பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முனைவர் பெ.சுரேஷ் உதவிப் பேராசிரியர் ஸ்ரீ வித்யா மந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

திருக்குறள் கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் 08.01.2026 அமர்வில் சிறப்பு பொழிஞர்களாக முனைவர் சி.கணேசன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தருமபுரி, முனைவர் ரா.சிலம்பரசன் மதிப்புறு விரிவுரையாளர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆய்வு மையம், பெரியார் பல்கலைக்கழகம் சேலம் திரு.கி.விக்னேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடெல்லி ஆகிய மூவரும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

திருக்குறள் கருத்தரங்கத்தின் மூன்றாம் நாள் 09.01.2026 நிகழ்வில் சிறப்பு பொழிஞர்களாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு மொழிகள் துறைத்தலைவர், புல முதன்மையர், வளர்தமிழ் புலம் முனைவர் குறிஞ்சி வேந்தன், பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் இரா.வசந்தமாலை அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள், திருக்குறள் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ரூபாய் 31 ஆயிரத்து 500 பரிசு வழங்கி பாராட்டி சான்றிதழ் கொடுக்கப்பட்டது.