அனைத்து உலக வள்ளலார் மாநாடு - பேச்சு, கட்டுரை, வள்ளலார் பாடல்கள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டி
நமது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைத்து உலக வள்ளலார் மாநாடு சார்பாக தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் 19.01.2026 அன்று நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, வள்ளலார் பாடல்கள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்றனர். இப் போட்டிகளில் ஓவியப் போட்டியில் ச.திவ்யா (இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு) இரண்டாம் இடமும் மா. ஸ்ரீதர் (இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு) மூன்றாம் இடமும் கட்டுரைப் போட்டியில் பு.அபித்ரா (இளம் அறிவியல் கணிதவியல் மூன்றாம் ஆண்டு) இரண்டாமிடமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.