கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

முதல் தலைமுறை வாக்காளர் பதிவு செய்ய விழிப்புணர்வு நிகழ்வு

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு முகாம் 08.10.2026-அன்று நடைபெற்றது. தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இக்கல்லூரியில் செயல்படும் தேர்தல் கல்வியறிவு குழுக்களின் மூலம் மாணவ, மாணவிகளின் முதல் முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு முகாம் முதல்வர் பெ. மைதிலி தலைமையில் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் லட்சுமி முன்னிலை வகித்தார்.தனி தாசில்தார் பெருமாள், புதிய வாக்காளர்களாக மாணவர்களை பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியதோடு, அது தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான செயல்முறைகளை விளக்கமளித்தார். இந்நிகழ்வில் தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் தேர்தல் கல்வியறிவு குழு அலுவலர் திரு அருண்நேரு ஒருங்கிணைத்தார். இதில் அனைத்து துறை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள், NSS மாணவர்கள் கலந்து கொண்டனர்.