கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

Women’s Day Celebration

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.03.2025 அன்று காலை 10.30 மணிக்கு மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வீ.இரவி, அவர்கள் தலைமை வகித்து பாலின சமத்துவம், பெண்ணுரிமை குறித்து உரையாற்றினார். இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டி.க.சித்திரைசெல்வி அவர்கள், முன்னிலை உரை ஆற்றினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் வெ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகளிர் அதிதி அரிமா சங்கத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அரிமா.அ.கு.மோகனாம்பாள் அவர்கள் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவி, கிரண்பேடி, வேலுநாச்சியார், பி.டி.உஷா, ஹெலன் கெல்லர் போன்ற சாதனைப் பெண்மணிகள் குறித்து உரையாற்றி பெண்மையின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். அ.கு.மோகனாம்பாள் அவர்கள் ரூ.20,000/- மதிப்புள்ள வம்சி பதிப்பகம் புத்தகங்களை கல்லூரி நூலகத்திற்கு கொடையாக வழங்கினார். மகளிர் தின விழா குறித்து நடத்தப்பட்ட போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி நூலகர் முனைவர் கி.ச.கல்யாணி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இதில் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பா.சுதா அவர்கள் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இ.சுஜிதா அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேலும், இவ்விழா மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளோடு நிறைவுற்றது.