பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08-03-2024 அன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. அன்பரசி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இவ்விழாவிற்கு மேனாள் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் P.பழனியப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராய் பங்கேற்று நமது வாழ்வில் உயர்வினை வயது தீர்மானிக்காது கல்வியே தீர்மானிக்கும் என்றும் ஆசான் சொற்களை மதித்து உலகத்தில் உயர்ந்திட வேண்டுமென்றும் கல்வி பயில்வதற்குரிய இப்பருவத்தில் பயின்று முன்னேற வேண்டும் என்றும் சிறப்புரை ஆற்றினார். மேலும், வரலட்சுமி ஸ்டார்ச் இண்டஸ்டிரியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் திருமதி சுகுணா அன்பழகன் அவர்கள் சாதனைப் பெண்களை பற்றி எடுத்துரைத்து நீங்களும் சாதிக்க வேண்டுமென சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவிற்கு கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் வெ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையும், வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பா.சுதா அவர்கள் நன்றியுரையும் நல்கினர். இவ்விழாவில் அனைத்து பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மாணவ/மாணவியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.